உக்ரைய்ன் போர்க்களத்தின் 6 ஆம் நாளில், ரஸ்யர்கள் எதிர்வரும் மணித்தியாலங்களில் அதிக வலிமையுடன் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உக்ரைனிய பாதுகாப்புக்கு எதிராக ரஸ்யா தனது வலிமையை மறுசீரமைப்பதால், போர்க்களத்தில் சிறிது மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது கடந்த 48 மணி நேரத்தில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.
ரஷ்யப் படைகள் தற்போது குழாய் மற்றும் பீரங்கி ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன.
இவை மிகவும் அதிகமான பொதுமக்களிற்கு இறப்புக்களையும் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.
கார்கிவில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஸ்ய படையினர் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் ஆயுதம் அல்லது வெற்றிட வெடிகுண்டுகளே பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தெற்கு உக்ரைனில் போரின் முதல் நாட்களில் இருந்து ரஷ்ய படைகளின் முன்னேற்றங்கள் தற்போது குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் சபோரிஷியா மீது பலமான தாக்குதல்களை ரஸ்யா நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.