உக்ரைன் மீதான ரஷ்ய போரின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸ் எல்லையில் சுமார் 5 மணி நேரம் கலந்துரையாடியிருந்தனர்.
எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் இது முதற்கட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் பல மணிநேரம் நீடித்தன.
எனினும், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இருந்து பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியவர்கள் ஆலோசனைக்காக தங்கள் தலைநகரங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், அடுத்த சில நாட்களில் மீண்டும் சந்திப்போம் என்றும் ரஷ்யா தெரிவித்தது.
இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, ரஷ்ய இராணுவத்தின் ‘அணுஆயுதப் படை பிரிவை’ தயார் நிலையில் இருக்குமாறு, விளாடிமிர் புடின் உத்தரவிட்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.