உலகம் செய்திகள்

உக்கிரமடைந்த உக்ரைன் போர்க்களம்

ரஸ்ய-உக்ரைன் மோதலில், முதல் ஐந்து நாட்களில் இடம்பெற்ற தீவிரமான சண்டையில் 5,710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், 200 க்கும் மேற்பட்ட ரஸ்ய வீரர்கள் உக்ரைனியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

198 ரஸ்ய தாங்கிகள், 29 விமானங்கள், 846 கவச வாகனங்கள் மற்றும் 29 உலங்கு வானுார்திகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த தகவல்கள் சரியானவையா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும் உக்ரைன் மீதான அதன் படையெடுப்பின் போது மொஸ்கோவின் படைகள் பெரும் இழப்பை சந்தித்ததாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.

தமது தரப்பில் படையினர் கொல்லப்பட்டமையை ரஸ்யா ஏற்றுக்கொண்டபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.

Related posts

இணைய வழி சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

namathufm

மகிந்தவின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு

Thanksha Kunarasa

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

Thanksha Kunarasa

Leave a Comment