இலங்கை செய்திகள்

இலங்கை முழுவதும் 7.30 மணி நேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் நாளை , சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம், மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு, இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை வேளையில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், இரவு வேளையில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கனடாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

Thanksha Kunarasa

மின்வெட்டு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

editor

சில மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

Thanksha Kunarasa

Leave a Comment