தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு விஷ்ணு, தற்போது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
சமீபத்தில் அவர் தனது குடும்பத்தை பற்றி மீம்ஸ் வெளியிடுபவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டது, தெலுங்கு சினிமா துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தற்போது மஞ்சு விஷ்ணு, ஜூப்லி ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.
அதில் தனது வீட்டில் இருந்த விலையுயர்ந்த மேக்கப் கிட் காணாமல் போய்விட்டது என தெரிவித்து இருக்கிறார். அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய்.
முதலில் அது நடிகர் சங்கம் MAA அலுவலகத்தில் இருந்து திருட்டு போனது என செய்தி வெளியானது. ஆனால் போலீஸ் அளித்துள்ள விளக்கத்தில், திருட்டு நடந்தது வீட்டில் என விளக்கம் அளித்து இருக்கின்றனர். இது தொடர்பில் வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டு நடைபெற்ற நாளில் இருந்து ஹேர் ட்ரெஸ்ஸர் நாக ஸ்ரீனு என்பவர் தலைமறைவாக இருக்கிறார் என கூறப்படுகிறது.. ஆனால் போலீஸார் அது பற்றி உறுதிப்படுத்தவில்லை.