யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம்இ 04 ஆம்இ 05 ஆம் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று அமர்வுகளும், மூன்றாம் நாள் ,இரண்டு அமர்வுகளுமாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 619 பேர் பட்டங்களைப் பெறுகின்றனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று, இன்று காலை 10.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக சபா மண்டபத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், கல்வி மற்றும் ஆராய்சி வெளியீடுகள் பிரிவின் உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.