ரஸ்யாவின் மத்திய வங்கியானது அதன் முக்கிய வட்டி விகிதத்தை 9.5 வீதத்தில் இருந்து 20 வீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது
இது ரூபிள் தேய்மானம், அதிக பணவீக்க அபாயங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த வட்டி விகித அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது நாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நாணய வருவாயில் 80 வீதத்தை விற்பனை செய்யும் என ரஸ்ய மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது
இதேவேளை, ரஸ்ய பொருளாதாரத்திற்கான வெளிப்புற நிலைமைகள் கடுமையாக மாறிவிட்டன என்று ரஸ்ய மத்திய வங்கி ,அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.