ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ,உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதேபோல் ரஷ்யா தரப்பில், உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் பிரதிநிதிகள், ‛உடனடியாக போர் நிறுத்த வேண்டும்; அதே போல ரஷ்ய படைகள் முழுமையாக வெளியேற உத்தரவிட வேண்டும், கிவ் நகரிலிருந்து ரஷ்ய ராணுவத்தில் பெரும் படைகள் 30 கிலோமீட்டர் தொலைவில் முகாமிட்டு உள்ளது என்றனர்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
யுத்தகளம் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் இருந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.