இலங்கை செய்திகள்

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன தங்களது வருடாந்த அமர்வுகளை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு உள்ள நிலையிலேயே, அந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறித்த இரு நிறுவனங்களினதும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியம் ,மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் ஏற்கெனவே உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைநிறுத்துவதற்கான வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் வகுத்து, பொருளாதாரத்தை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் மறுசீரமைத்து, நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கத்தை வழிநடத்தும் என்பதை, அரசாங்கம் பெருமளவில் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிப்பு !!

namathufm

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்பு.

namathufm

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Thanksha Kunarasa

Leave a Comment