இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,65,000 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1,64,898 ஆகும் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மட்டும் 82,571 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறித்த நாட்டிலிருந்து 26,597 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 22,304 சுற்றுலா பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 16,638 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
உக்ரைனிலிருந்து 12,979 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
குறித்த நாடுகளிலிருந்தே அதிகவளான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.