இலங்கை செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு நாளை ஜெனீவா விஜயம்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நாளை ஜெனீவா விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவில் நீதி அமைச்சர் அலி சாப்ரியும் உள்ளடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் நோக்கில் இந்தப் பிரநிதிகள் குழு நாளை ஜெனீவா புறப்பட்டுச் செல்ல உள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி இலங்கை குறித்த அறிக்கை மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட உள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு எதனையும் நடாத்தப் போவதில்லை என மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஆட்சியை இராணுவமயப்படுத்தல், பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச தரத்திற்கு மாற்றியமைக்காமை, பொலிஸ் கைதுகளின் மத்தியில் மரணங்கள் நிகழ்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முனைப்புக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எரிவாயு பெறுவதற்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

namathufm

ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

Thanksha Kunarasa

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க அனுமதி

Thanksha Kunarasa

Leave a Comment