உலகம் செய்திகள்

ரஷ்யாவின் போருக்கு எதிராக பேர்லினில் 500000 பேர் – போராட்டம்.

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகள் பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் பாரிய மக்கள் அணி திரண்டுள்ளனர்.

இதன்போது உக்ரைனில் நடக்கும் போருக்கு எதிராக பேர்லினில் 500000 பேர்  வரை ஒன்று கூடி  ரஷ்யாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர்.

Related posts

நீதி கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!!

namathufm

சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கை இளைஞன்

Thanksha Kunarasa

வார இறுதி ரயில் சேவை – கல்கிசை முதல் காங்கேசன் துறை வரை !

namathufm

Leave a Comment