தங்களுடைய நாட்டை ரஸ்யாவிடமிருந்து காப்பாற்றுவதற்காக உக்ரேனிய பெண்கள் பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரித்து வருகின்றார்கள்.
உக்ரேனிய நகரத்தின் மையத்தில், புல் தரையில் பெண்கள் கூட்டம் கூட்டமாக இருந்து, ரஷ்ய துருப்புகளின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், அவர்களிடம் இருந்து வீடுகளையும், வீதிகளையும் பாதுகாக்கவும் வீட்டிலேயே பாட்டில்கள் மூலம் நெருப்புக் குண்டுகளைத் தயாரிக்கின்றார்கள்.
ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் இல்லத்தரசிகள் ஆகியோர் அடங்கிய பெண்கள் கண்ணாடி பாட்டில்கள், கிழிந்த துணிகள், எரிபொருள்களுடன் காணப்படுகின்றனர்
அந்தப் பெண்களில் சிலர், தங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் பயத்தை ஊட்டுவதாக இருந்தாலும் தம்முடைய நாட்டை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு வேறு வழியில்லாமல் இதை மேற்கொள்வதாக கூறுகின்றார்கள்.
ஆனால் அவர்கள் எதற்கும் முகம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுகின்றார்கள். இந்த நகரம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. ஆனால் இந்த போரின் தீவிரத்தை அது ஏற்கனவே உணர்ந்திருக்கிறது. ராணுவ மருத்துவமனையில் 400 படுக்கைகள் உள்ளன. அவை கிழக்கு யுக்ரேன் முழுவதிலும் இருந்து வந்த காயமடைந்த வீரர்களால் நிரம்பியிருக்கின்றன.
இந்கே இருக்கின்ற மக்கள் அனைவரும் தம்முடைய நாட்டை காப்பாற்றுவதற்கு துணிவுடன் களத்தில் உள்ளார்கள் என்று கூறுகின்றனர்.