உலகம் செய்திகள்

தங்கள் நாட்டு வான்வெளியை ரஷிய விமானங்கள் பயன்படுத்த தடை !!

இன்று 4-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர். இதனிடையே ரஷியாவில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரு பெரிய நகரங்களை சுற்றி வளைத்துள்ளதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை முற்றுகையிட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

உக்ரைன்-ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

ரஷ்யாவின் மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

மேலும் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என்று உக்ரைனை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷிய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும்,உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க வைப்போம் என்றும் கனடாவின் போக்குவரத்து அமைச்சர் உமர் அல்காப்ரா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பால்டிக் நாடுகள், போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா, இத்தாலி மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட ரஷியாவிற்கு சொந்தமான விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல இங்கிலாந்து வான்வெளியில் பறக்கவும் ரஷிய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் புத்தர் சிலைகளை வைத்து இனியும் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முடியாது- சுமந்திரன் எம்பி

Thanksha Kunarasa

பிரான்ஸ் ஜனாதிபதியின் எச்சரிக்கை .

Thanksha Kunarasa

உக்ரைன் தலைநகரில் குவிக்கப்பட்ட ராணுவப் படைகள் குறைப்பு!

namathufm

Leave a Comment