செய்திகள் விளையாட்டு

இலங்கை உதைபந்தாட்ட வீரர் மாலைத்தீவில் உயிரிழப்பு.

இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பஸ்லஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார்.

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.

இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராகவும் விளங்கினார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினை பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது. இவ்வருடத்திற்கான மிக பிரபலமான வீரருக்காக இடம்பெற்ற கருத்து கணிப்பில், ரன்னரப்பாக பஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

வெப்பத்தில் கொதிக்கும் மைதானம் !!! பணத்தை தண்ணீராக செலவழிக்கிறது கட்டார் !

namathufm

2021-இல் உகாண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களின் விபரத்தை வெளியிட்ட ஶ்ரீலங்கன் விமான நிறுவனம்

Thanksha Kunarasa

அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment