உலகம் செய்திகள்

இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்- புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்நிலையில் ‘இந்த பொருளாதார தடைகள் நிச்சயமாக எதையும் மாற்றாது. அமெரிக்காவுக்கு இது தெளிவாக தெரியும். அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையப்படும் வரை போர் நடவடிக்கை தொடரும்’ என ரஷ்ய தேசிய பாதுகாப்பு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் உக்ரைன் அதனை மறுத்துள்ளது.

இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி வழங்கப்போகும் செய்தி

Thanksha Kunarasa

IMF பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதியை சந்தித்தனர்

Thanksha Kunarasa

கொழும்பு விரைகிறார் இந்திய வெளி விவகார அமைச்சர்

Thanksha Kunarasa

Leave a Comment