யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் ரயில் நிலைய கடவையில், ரயிலில் மோதுண்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி ரயில், இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது கடுகதி ரயில் இளைஞரை மோதியுள்ளது.
உயிரிழந்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் விறகு ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்த இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.