உலகம் செய்திகள்

மெட்ரோ சுரங்கத்தில் உக்ரைன் கீவ் நகரில் பிறந்த பெண் குழந்தை !

மெட்ரோ சுரங்கத்தில் பிரசவ வலியில் துடித்த நிறைமாத கர்ப்பிணிக்கு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

உக்ரைன் நாடு மீது போர் தொடுத்துள்ள ரஷிய ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் கீவுக்குள் புகுந்தும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களுக்கு உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். மூன்றாவது நாளாக சண்டை நீடிக்கிறது. இதனால் உக்ரைனில் இருக்கும் மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள் மற்றும் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இந்த போருக்கு மத்தியில் சுரங்கத்தில் பதுங்கி இருந்த 23 வயதான பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கீவ் நகரத்தில் உள்ள மெட்ரோ சுரங்கம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விரைந்த போலீசார் சக மக்களுடன் சேர்ந்து உதவியுள்ளனர். இதில் பெண்ணுக்கு சுரங்கத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர், ஆம்புலன்ஸில் தாயையும், சேயையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் அங்கு நலமுடன் இருப்பதாகவும், குழந்தைக்கு மியா என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

வார இறுதி ரயில் சேவை – கல்கிசை முதல் காங்கேசன் துறை வரை !

namathufm

சர்வதேச நன்கொடை அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களைக் கட்டணமின்றி ஏற்றி வருகின்றது சிறிலங்கன் ஏர்லயன்ஸ் !

namathufm

பிரான்சில் முடக்கப்பட்ட இணையத்தளங்கள்!!

namathufm

Leave a Comment