உலகம் செய்திகள்

பிரித்தானியா அதிரடி அறிவிப்பு.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடைகளை அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர்களுக்கு எதிராக எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பதை பிரித்தானிய பிரதமர் அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியம் இவர்களுக்கு எதிரான சொத்து முடக்கத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த இரண்டாவது நாளில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆக்கிரமிப்புச் செயல் தோல்வியடைவதை உலகம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

Related posts

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தோல்வி!

Thanksha Kunarasa

திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Thanksha Kunarasa

கொழும்பு கோல்ட் சென்டர் கட்டிடத்திற்கு அருகில் தீ விபத்து

Thanksha Kunarasa

Leave a Comment