உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் துவங்கியுள்ள நிலையில், இந்த போர் நீண்ட காலம் நீடிக்கும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்று காலை நான் உங்களுக்கு ஒரு விடயம் கூறமுடியுமானால், அது, இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்பதுதான்’ என்றார் மேக்ரான். இந்த போர் நீடிக்கும், அதனால் ஏற்பட இருக்கும் பின் விளைவுகளும் நீண்ட காலத்துக்கு இருக்கும் என்று கூறிய அவர், அதற்காக நாம் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
ஐரோப்பாவிற்கு போர் மீண்டும் திரும்பியுள்ளது என்று கூறியுள்ள மேக்ரான், துயரமான மனிதநேயச் சூழல், எதிர்க்கும் ஒரு மக்கள் கூட்டம், அவர்களுக்கு ஆதரவாக ஐரோப்பா என ரஸ்ய அதிபர் புடின் உருவாக்கிய நிலை என்றார்.
எப்படியாவது உக்ரைன் ரஷ்ய மோதலைத் தவிர்க்கவேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டவர்களில் மேக்ரானும் ஒருவர். அவர் பல முறை தொடர்ந்து புடினுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.