, உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற தனது முந்திய முடிவை ஜேர்மனி கைவிட்டுள்ளது. உடனடியாக ஆயிரம் ரொக்கெட் லோஞ்சர்களையும் 500 விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பிவைப்பதாக அது இன்று அறிவித்திருக்கிறது. உலகப் போருக்குப் பின்னர் மோதல் களம் ஒன்றுக்கு ஜேர்மனி தனது அழிவு ஆயுதங்களை அனுப்புவது இதுவே முதல் முறை என்பதால் இன்றைய அதன் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் உக்ரைன் புடினின் ஆக்கிரமிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முழுஉதவியையும் வழங்க வேண்டியது நமது கடமை என்று ஜேர்மனிய சான்சிலர் ஒலப் சோல்ஸ் அறிவித்திருக்கிறார்.அவரது முடிவை உக்ரைன் அதிபர் வரவேற்று மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார். ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நேட்டோவும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்ற போது ஜேர்மனி அதிலிருந்து விலகி இருந்தமை கூட்டணி நாடுகளிடையே அதன் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.