இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று (26) இரவு 7 மணிக்கு தர்மசாலாவில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி சில மாற்றங்களுடன் களமிறங்கும் எனவும், இன்றைய போட்டியில் தனுஷ்க குணதிலக மீண்டும் அணிக்கு அழைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானத்திற்கு அருகில் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டியில், இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், தொடரில் 1-0 என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.