எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து, நேற்று முன்தினம் வெளிவந்த திரைப்படம் வலிமை.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழக பாக்ஸ் ஆபிஸில் சர்கார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் திரையரங்கத்தின் முன் ஆரவாரத்துடன் காத்துக்கொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் மனைவி, நடிகை ஷாலினி தனது கணவர் அஜித்தின் படத்தை பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கு ரசிகர்களின் ஆட்டம், பாட்டத்தை பார்த்து ஷாக்கான நடிகை ஷாலினி, வலிமை படத்தை பார்க்காமல், திரையரங்கில் இருந்து வெளியேறியுள்ளார்.