இலங்கை செய்திகள்

இலங்கையில், சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களுக்கு நிதியுதவி!

சிவராத்திரி விரத காலத்தில், ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்கம் நல்கும் வகையில் பிரதமர் மகிந்தவின் பணிப்புரைக்கமைய, சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது

சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு சிவராத்திரி தினமான எதிர்வரும் (01.03.2022) அன்று, ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரத் தலங்கள் உட்பட, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இந் நிதியுதவி வழங்கும் செயற்றிட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இளம் இந்துச் சிறார்களின் ஆன்மீக உணர்வுகளை மேன்மையுறச் செய்து, கலை நிகழ்வுகள் மூலமாக ஆக்கத்திறன், ஆளுமைகளுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு, மேன்மேலும் அவர்களுக்கு ஊக்கம் நல்கும் விதத்தில் பரிசில்கள் வழங்கிப் பாராட்டுதல் போன்ற முக்கிய நோக்கத்தினை உடையதாகவே, மகாசிவராத்திரியை முன்னிட்டு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் சிவாலயங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முகக்கவச தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை

Thanksha Kunarasa

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு!

namathufm

போலிச் செய்தி வெளியிட்டதாக கூறி தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளை பல பிரதேசங்களிலும் எரித்து “கிழக்கின் கேடயம்” அமைப்பினர் எதிர்ப்பு.

namathufm

Leave a Comment