இலங்கை செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை; வெளிவிவகார செயலாளர்.

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான போர் நேற்றையதினம் உக்கிரமடைந்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் போர் ஆரம்பமாகியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் விடயத்தில் இலங்கை, நடுநிலை வகிக்கும் என இலங்கை வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதேநேரம், பெலாரஸில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் மீண்டும் 8 மணித்தியால மின்வெட்டு

Thanksha Kunarasa

ருமேனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இலங்கையர்கள் பலி

Thanksha Kunarasa

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிக்கை …!

namathufm

Leave a Comment