இலங்கை செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போரால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா பரவியதன் பின்னர் இலங்கையில் சுற்றுலாத் துறை தற்போதுதான் மீள் எழுச்சி பெற்று வருகின்றது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர்.

அதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் இரண்டு பிரதான வாடிக்கையாளர்களாகும். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்த போர் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உக்ரேனில் யுத்தம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சு அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் தகவல் அறிந்துக் கொள்வதற்கு அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், உக்ரைனில் உள்ள இலங்கையர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமை +90 534 456 94 98 அல்லது 1090 312 427 10 32 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் slemb.ankara@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய வர்த்தகரின் சொகுசுப் படகு பிரான்ஸ் கைப்பற்றி முடக்கியது!

namathufm

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்கள்

Thanksha Kunarasa

Leave a Comment