உலகம் செய்திகள்

பிரித்தானிய விமானங்கள் பிரவேசிக்க தடை.

பிரித்தானியாவின் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் இரண்டாவது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் இராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், உக்ரைன் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து, கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இன்று நடைபெற்ற போரில் உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஐ.நா மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை

Thanksha Kunarasa

அமெரிக்காவில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

Thanksha Kunarasa

பொரிஸ் ஜோன்சன் உட்பட அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!!

Thanksha Kunarasa

Leave a Comment