உலகம் செய்திகள்

உக்ரைன் தேசிய நிறங்களில் ஒளிர்கின்றது ஈபிள் கோபுரம் !

அகதிகளைப் பராமரிக்க ஆயத்தம் செய்யுமாறு மேயர்கள் வேண்டுதல்

உக்ரைனுக்கு ஆதரவையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பாரிஸ் நகரின் ஈபிள் கோபுரம் நீலம்-மஞ்சள் நிறங்களில் ஒளிரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் நாடெங்கும் சில பொது இடங்களிலும் நகரசபைக் கட்டடங்களிலும் உக்ரைன் நாட்டின் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. உக்ரைனை எல்லையாகக் கொண்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ள அகதிகள் அங்கிருந்து மேற்கு ஐரோப்பா நோக்கிப்படையெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் பல்லாயிரக் கணக்கில் உக்ரைன் அகதிகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை நாடுகள் தொடக்கியுள்ளன. பிரான்ஸின் நகரசபை முதல்வர்களது சங்கம் (Association of Mayors of France)உக்ரைன் அகதிகள் வருகையை எதிர்பார்த்து முன் ஏற்பாடுகளைச் செய்யுமாறு நகர சபைகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. உக்ரைனுக்கு அனுப்புவதற்காக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களைச் சேகரிக்குமாறும் அது பொது மக்களிடம் கேட்டிருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் உலகின் பல நகரங்களில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.பாரிஸ் நகரில் ரிப்பப்ளிக் சதுக்கம் மற்றும் ரஷ்யத் தூதரகப் பகுதிகளில் போர்எதிர்ப்புப் பேரணிகள் நடைபெற்றுள்ளன.

Related posts

ரஸ்ய படைகளை புதைப்போம்: யுக்ரேன்

Thanksha Kunarasa

கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Thanksha Kunarasa

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்!

Thanksha Kunarasa

Leave a Comment