இலங்கை செய்திகள்

இலங்கையில் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம்.

நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக, பல்வேறு துறைகளின் போக்குவரத்துப் பணிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் பயணிகள் பேருந்து சேவை, மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கான சேவைகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பேருந்துகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளை முதல் பேருந்து சேவைகள் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.

Related posts

நல்லூர் ஆலய சூழலில் கிறீஸ்தவ மதமாற்ற சுவரொட்டிகள்! சிவசேனை அமைப்பு சீற்றம்.

Thanksha Kunarasa

ஜப்பானிய தூதுவர்- எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Thanksha Kunarasa

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக இருக்கும் பொது இடங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

namathufm

Leave a Comment