இலங்கை செய்திகள்

இலங்கையில் நீண்ட தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை!!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும்,மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசை நீடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனால் வவுனியா எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதே வேளை மலையகத்தில் பசறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் வாகன சாரதிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில், சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்களுக்கு நிதியுதவி!

Thanksha Kunarasa

கடலடி கேபிள்கள் தாக்கப்பட்டால் ஐரோப்பாவில் “இன்ரநெற்” துண்டிக்கும் ஆபத்துண்டா?

namathufm

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ்

Thanksha Kunarasa

Leave a Comment