இலங்கை செய்திகள்

இலங்கையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி.

தெற்கு, அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், அக்மீமன பகுதியைச் சேர்ந்த, 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தின் போது, வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீமெந்து ஏற்றப்பட்ட லொறியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில், மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட 29 வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, விபத்தில் மோட்டார் வாகன சாரதிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் ,அவரது தந்தையே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தனது 29 வயதுடைய மகளின் மருத்துவ பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூன்று மாதங்களுக்குள் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

விண்வெளி நிலையம் வீழ்வதைரஷ்யா இன்றித் தடுக்க முடியுமா? அந்நாட்டு விஞ்ஞானி கேள்வி பதற்றம் விண்வெளிக்கும்பரவுகின்றது!

namathufm

ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன்: ரணில் வெளியிட்ட தகவல்

Thanksha Kunarasa

Leave a Comment