இலங்கை செய்திகள்

இலங்கையில், தாயும் மகனும் செய்த செயல்.

இலங்கையில், பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில், சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக, 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், மாத்தறை வங்கிக் கிளையில் இருந்து, பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் 35 லட்சத்து 91ஆயிரம் ரூபாய் பணம் தவறாக வைப்பிடப்பட்டுள்ளது.

பணம் வந்தவுடன் குறுந்தகவல் ஒன்று ,அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. மாலை நேரத்தில் அந்த குறுந்தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மறுநாள் காலை தனது மகனுடன் உரிய வங்கிக்குச் சென்று, அந்த பணத்தை மீள எடுத்து, தவறாக வைப்பிட்ட நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பான தகவலை ஆதாரத்துடன் குறித்த பெண்ணின் மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘அந்தப் பணம் எங்களுக்கு தேவையில்லை. மற்றவர்களின் பணத்தில் மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மிகப்பெரிய தவறாகும். இந்தப் பணத்தால் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் மக்களுக்கும் சிக்கல் ஏற்படும். இதனால் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாட்டால் தாய் மற்றும் மகனுக்கு, பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

சீனா-இலங்கைக்கு இலவச அரிசி வழங்குகிறது!

namathufm

செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்!

Thanksha Kunarasa

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

Thanksha Kunarasa

Leave a Comment