இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம், நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என, இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் , இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.