இலங்கை

14 வயதுச் மாணவியை 7 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன் !!


14 வயது சிறுமியை ஏழு மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த நிலையில், தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும், இதற்கு காரணமான மாணவனும் ஒரே பாடசாலையில் 10ஆம் மற்றும் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும், நவகமுவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.சந்தேகத்திற்குரிய மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய மாணவனிடம் நடத்திய விசாரணையில், அந்த தொலைபேசியில் இருந்து தான் இணையத்தை பிரவேசித்து ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த மாணவியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இருவருக்குமே தாங்கள் செய்த செயலின் தீவிரம் தெரியவில்லை என்பது விசாரணைகளின் போது தெரியவந்ததாக சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவியும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

ஆசியக் கிண்ணத்தை வென்ற வீரர்களுக்கு மதிப்பளிப்பு !

namathufm

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

Thanksha Kunarasa

ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் பிரதேச செயலகங்களை அதிகரிப்பதில் காலிக்கும் மலையகத்திற்கும் ஏன் வெவ்வேறு சட்டங்கள்! – இராதாகிருஸ்ணன் கேள்வி –

namathufm

Leave a Comment