உக்ரைன் ரஷ்யப் போரின் எதிரொலியாக, லண்டன் பங்குச் சந்தையின் முன்னணி FVSE 100 குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அல்லது 2.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது, உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு உக்கிர மோதலாக உருவெடுத்ததையடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.