இலங்கை செய்திகள்

இலங்கை, யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி படுகொலை

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்றது.

மூதாட்டியின் படுகொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

73 வயதுடைய காணிக்கையம்மா ஜெயசீலி என்ற மூதாட்டியே பூச்சாடியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி! – இலங்கையில் விலை குறைப்பில்லை

Thanksha Kunarasa

இலங்கையில் ஊழலைக் கையாள்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தொடர வேண்டும் IMF முகாமைத்துவப் பணிப்பாளர்!

namathufm

கட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

Thanksha Kunarasa

Leave a Comment