நாடாளுமன்றத்தில் மின்வெட்டு ஏற்பட்டால், மலசலக்கூடத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் டோச் லைட் கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபையில் அறிவித்தார்.
அதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் இவற்றை அனுமதிக்க கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.