இலங்கை செய்திகள்

இலங்கையில் சில மாதங்களில் குழந்தைகளின் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு.

நாட்டில் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் பாரிய மருந்துத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக, அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில், தேவையான மருந்துகளுக்கு 5 வீத தட்டுப்பாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

மருந்துகள் வெவ்வேறு அடையாள முத்திரைகளுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான மருந்தகங்கள், நுகர்வோருக்கு மாற்று முத்திரை கொண்டு மருந்துகளை வழங்குகின்றன.

நுகர்வோர் கோரும் முத்திரை கொண்ட மருந்துகள் கையிருப்பில் இல்லை. எனவே தற்போதைய கையிருப்பு பங்குகளைக் கொண்டு நீண்ட காலத்துக்கு சமாளிக்கமுடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் மேற்படி பிரச்சினையில் அரசாங்கம் தலையிடாவிட்டால் சீமேந்து, வீட்டு எரிவாயு, மற்றும் பால்மா போன்றவற்றின் பற்றாக்குறையை விட பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.

நாட்டில் அனைத்துமே மக்களின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
எனவே மக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டால் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது என்று சந்திக கங்கந்த எச்சரித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடியால் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இறக்குமதி செய்யும் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டால் அவற்றை உள்ளூரில் விற்க முடியாது .

மாவட்ட வாரியாக பெரசிட்டமோல், பெனடோல், பெனடின், நைட்ரோஃபுரான்டோயின், நைட்ரோகாண்டின், நோர்ஃப்ளோக்சசின், மெக்னீசியம் சல்பேட் (தூள்) மனோரெஸ்ட் ஒக்செடோல் ஃபெனோபார்பிட்டல். ஃப்ரீசியம் 10 மிகி (கியோலாக்ஸ்), சாதாரண உப்பு, நைட்ரோஃபுரான்டோயின் சாதாரண உப்பு, அமிகாசின் தடுப்பூசி போன்றவற்றுக்கு தடுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்துள்ளார்.

.

Related posts

கிராமத்துக்கு தீ வைத்தது படை; நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

Thanksha Kunarasa

சிறிலங்கா பிரதமர் மகிந்த பாகிஸ்தானுக்கு விஜயம்

namathufm

பசில் ராஜபக்சவுடன், இந்திய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Thanksha Kunarasa

Leave a Comment