இலங்கை செய்திகள்

இலங்கையர்களை வத்திக்கானுக்கு வருமாறு அழைப்பு.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக, புனித பாப்பரசருக்கு தெளிவுப்படுத்துவதற்காக இத்தாலி மாத்திரமல்லாது ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை மக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வத்திகானுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பீட்டர்ஸ் தேவாலய வளாகத்திற்கு காலை 10 மணிக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, புனித பாப்பரசரரை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
அன்றைய தினம் பாப்பரசர் இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடலாம் என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு நீதியை தேடும் மக்களாக, ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வில் ஒன்றிணையுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ரஷ்ய வர்த்தகரின் சொகுசுப் படகு பிரான்ஸ் கைப்பற்றி முடக்கியது!

namathufm

மார்ச் 05 முதல் மின்வெட்டு இடம்பெறாது; சிறிலங்கா அரச அதிபர்.

namathufm

யாழ் – பல்கலைக் கழக கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம்!

namathufm

Leave a Comment