இலங்கை செய்திகள்

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணி நேர மின் வெட்டு

இலங்கை முழுவதும் 7 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் பல பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் நான்கரை மணி நேர மின்வெட்டை ஆணையம் அனுமதித்துள்ளது.

அதற்கமைய, சில வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும், ஏனைய வலயங்களில் 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணையத்தின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் நாட்டில் இதே போன்ற நிலைமை நீடித்தால் 7 மணித்தியால மின் தடை அமுல்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related posts

உயிர்காப்பு வண்டி மீது துப்பாக்கி பிரயோகம் – நால்வர் தப்பியோட்டம் !

namathufm

எரிபொருள் பிரச்சினை: தீர்வு கோரி நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம்!

Thanksha Kunarasa

சில மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

Thanksha Kunarasa

Leave a Comment