இலங்கை செய்திகள்

இலங்கையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும்: அமைச்சர் ரமேஷ் பத்திரன

இலங்கையில், விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் எனவும் ,எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான பதற்றங்களின் பின்னணியில் உலக சந்தையில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விலையைத் திருத்துவது தொடர்பாக அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை.

எவ்வாறாயினும் அத்தகைய திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மட்டக்களப்பில் கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுவன் பலி

Thanksha Kunarasa

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் மக்கள் பாரிய போராட்டம்

Thanksha Kunarasa

தமிழக மீனவர்கள் மூவர் கைது

Thanksha Kunarasa

Leave a Comment