ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து மேற்படி இரு இலங்கையர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த இருவரும் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்தபோது எதிரில் வந்த மகிழுந்து அவர்களை மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ருமேனியாவில் பணியாற்றி வந்த இலங்கையர்கள் இருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.