இலங்கை செய்திகள்

யாழில் வன்முறைகளில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது!

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இன்று கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர், 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்

namathufm

காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறக்கம்

Thanksha Kunarasa

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

Thanksha Kunarasa

Leave a Comment