இந்தியா செய்திகள்

போதைப்பொருளுடன் 8 பேர் கைது

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு பொலிசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து பொலிசார் சோதனை செய்ததில், அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவியை கோருகின்றது இலங்கை!

namathufm

இலங்கை முழுவதும் நாளாந்தம் 7 மணி நேர மின் வெட்டு

Thanksha Kunarasa

மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

Thanksha Kunarasa

Leave a Comment