நாட்டில் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சுழற்சி முறையிலான மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்குமாறு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியால சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.