இலங்கை செய்திகள்

இலங்கையின் வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்றி வருவதாகவும் தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வருகை தந்து தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு

Thanksha Kunarasa

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை:

Thanksha Kunarasa

ரஷ்யா – உக்ரைன் போர் – வல்லரசு நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடல்!

Thanksha Kunarasa

Leave a Comment