இலங்கை செய்திகள்

யாழில் 5 மாத குழந்தையோடு கணவன் தலைமறைவு ! தேடி அலையும் மனைவி

யாழ்.இளவாலை பகுதியில் 5 மாத குழந்தையோடு தலைமறைவான கணவனைத்தேடி மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை தூக்கிச் சென்றமை தொடர்பில் இளவாலைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் முற்படுமாறு கோரியதற்கிணங்க பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான கணவரிடம், குழந்தை 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இடைக்கால கட்டளை வழங்கியது.

இந்நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையிலேயே மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

Related posts

பதவிக்காலம் முடியும்வரை நானே பிரதமர் – மஹிந்த

Thanksha Kunarasa

அணு விபத்து அல்லது தாக்குதல் நடந்தால் : பிரான்சில் போதியளவு அயோடின்கையிருப்பில் – அமைச்சர் தகவல்

namathufm

வானொலி தகராறினால் ஒருவர் வெட்டிக் கொலை

Thanksha Kunarasa

Leave a Comment