மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை முழுமையாக வென்று ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் , இதற்கு முன்பு இருந்த தலைவர்களை விட வித்தியாசமாக இருந்தது. இதன் மூலம் இந்திய அணி நம்பர் 1 டி20 அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
விராட் கோலி ஆக்கோரஷைமான கேப்டன், தோனி கூல் கேப்டன் என்றால், ரோகித் யுத்திகளை வகுத்து அதனை கையாள்வதில் கில்லாடியாக இருக்கிறார். ரோகித் சாதனை இதன் மூலம் டி20 போட்டியில் அதிக முறை எதிரணியை வெள்ளையடிப்புச் செய்த இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் படைத்துள்ளார். இந்த சாதனையை தோனி ஒரு முறையும், கோலி 2 முறையும் படைக்க, ரோகித் 4 முறை மேற்கொண்டுள்ளார். இதை தவிர 5 ஐபிஎல் கோப்பை, ஆசிய கோப்பை என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் ரோகித் சர்மா.

இந்த நிலை வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் முக்கிய நல்ல விசயமே நடுவரிசை வீரர்கள் ரன் குவித்தது தான். அனுபவம் இல்லாத வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர். இதே போன்று வேகப் பந்து வீச்சாளர்களும் வெற்றிக்கு பெரும் பங்காற்றினர். சவால்கள் நாங்கள் ஸ்கோரை துரத்துவதில் சிறப்பாக செயல்படுவோம். ஆனால் முதலில் பேட் செய்யும் போது பல சவால்கள் இருக்கும். கடினமான சூழலிருந்து எப்படி மீள்வது என்பதை அணியாக கற்று கொண்டோம். ஃபில்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் நாங்கள் நினைத்தைதை போல் சரியாக செயல்பட்டோம். இன்னும் நாங்கள் கற்று கொள்வோம். இலங்கை தொடரிலும் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். உலககோப்பை தான் எங்களது குறிகோள் , அதற்கான அணியை தான் தயாரித்து வருகிறோம். உலககோப்பைக்கு முன் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர்களை தயார்படுத்திக் கொள்ள வழி செய்கிறோம். மொத்தத்தில் அணியின் செயல்பாடு குறித்து மகிழ்ச்சி அளிக்கிறது.