இலங்கை செய்திகள்

டொலர்களை கோரும் ஸ்ரீலங்கன் விமானிகள்

டொலர்களில் தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை தற்போதைய அந்நிய செலாவணி வீத்திற்கு அமைய ஒரு டொலருக்கு 250 ரூபா வீதம் செலுத்துமாறு, விமானிகள் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துள்ளதாக, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானங்களை இயக்கி வெளிநாடு செல்லும் விமானிகளுக்கு மூன்று வேளை உணவு, ஹொட்டல்களில் தங்கி இருக்க, வழங்கப்படும் டொலர்களை அதிகரிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை விமான ஓட்டிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர, அவசர தேவைக்காக சேவைக்கு அழைக்கப்படும் விமானிகளுக்கு விடுமுறை நாட்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு டொலர்களில் வழங்கப்படுவதுடன் தற்போதைய அந்நிய செலாவணி வீதத்திற்கு அமைய இது போதுமானதாக இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது விமானிகளுக்கு ஒரு டொலருக்கு 188 ரூபாய் என்ற வீதத்தில் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருந்தொகை பணம் தமக்கு கிடைக்காமல் போவதாக விமான ஓட்டிகள் சங்கம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் சுமார் 180 விமானிகள் கடமையாற்றி வருகின்றமை குறிபப்பிடத்தக்கது.

Related posts

தலவாக்கலை தொழிற்சாலைக்கு மேலுள்ள காட்டுப்பகுதியில் பாரிய தீ ; பல ஏக்கர்கள் எரிந்து சாம்பல் !

namathufm

நைஜீரியாவில் 16 பேர் சுட்டுக்கொலை

Thanksha Kunarasa

பேர்ளின் ரயில் நிலையத்திலும் வந்து குவிகின்றனர் அகதிகள் ! ஜேர்மனிக்குப் பெரும் சவால்!

namathufm

Leave a Comment