செய்திகள் விளையாட்டு

ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மெத்திவ் வேட் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொண்டார்.அணித்தலைவர் தசுன் சானக 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய அவுஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் ​​தொட​ரை ​கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்

Thanksha Kunarasa

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இரு அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

namathufm

உக்ரேனின் அணு ஆயுத முயற்சியை அனுமதிக்க மாட்டோம்- ரஸ்ய வெளியுறவு அமைச்சர்

Thanksha Kunarasa

Leave a Comment